» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

சனி 31, ஆகஸ்ட் 2024 10:32:01 AM (IST)



தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் ஜேசிஸ் அமைப்பைச் சார்ந்த ராஜேஷ் மற்றும் ராஜசேகர் ஆகியோர் போதைப்பொருட்களின் பழக்கம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். போதைப்பொருட்கள் பழக்கம் மூளை, கல்லீரல், இதயம் போன்ற உடலுறுப்புகளை பாதித்து நரம்புத் தளர்ச்சி, புற்று நோய் ஆகிய விளைவுகளை உண்டாக்கும். எனவே மாணவர்கள் போதைப் பொருட்களை தாங்கள் பயன்படுத்தாமல் இருப்பதோடு மட்டுமன்றி நண்பர்களும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதையும் தடுப்போம் எனவும் போதையில்லா தமிழகம் உருவாக பாடுபடுவோம் எனவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பள்ளியின் தலைமையாசிரியர் அருட்தந்தை அமல்ராஜ் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் செல்வன் சில்வா வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் பெனிட்டன் நன்றியுரை ஆற்றினார். ஆசிரியர் ஜான் போஸ்கோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மதுரை மறைமாநில சேசு சபையின் முன்னுரிமைத் திட்டங்களின் செயற்பாட்டுக் குழு இந்நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்திருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory