» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு மாநாடு: ஆட்சியர் பங்கேற்பு

வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 3:37:45 PM (IST)



தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் தமிழக அரசின் ஸ்டார்ட் அப் இணைந்து புதுமை கண்டுபிடிப்பு மாநாடு 1.0 நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பங்கேற்று சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், ஐ.ஏ.எஸ்., தலைமை தாங்கினார். தமிழக அரசின் திட்ட தலைமை அதிகாரி ராகுல் வரவேற்புரையாற்றினார். ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவ செல்வங்கள் தங்களது தனி திறமை மூலம் தொழில்முனைவோராக மாறி வருகின்றனர். தமிழக அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஊக்கம் அளித்து வருகிறது என்று கூறினார். 

விழாவில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பேசுகையில், "தமிழக அரசு உயர்கல்வி மாணவர்களுக்கு ஸ்டார்ட் அப் மூலமாக புதுமை கண்டுபிடிப்புகளுக்கு நிதி அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஸ்டார்ட் அப் மூலமாக மாணவர்கள் தொழில் தொடங்கி பலருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகின்றனர். இதனை தொழில் முனைவில் ஆர்வம் உள்ள மாணவர்கள் அரசின் திட்டத்தை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் கிளிங்டன் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து புதுமை, தொழில்முனைவு மற்றும் ஆதரவு அமைப்பு ஆகியவற்றின் பங்குகுறித்து குழு விவாதம் நடைபெற்றது. மேலும் ஸ்டார்ட்அப்களுக்கு தொழில் முனைவோர் வளர்ச்சி பற்றி விரிவுரை அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தொழில்முனைவோர் துறை ஒருங்கிணைப்பாளர் ஜோ பேட்ரிக் மற்றும் நிர்வாக அலுவலர் விக்னேஷ் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory