» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டி பள்ளியில் பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 7:43:10 AM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கோவில்பட்டி நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதி வெளியானது. இந்த நிலையில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பள்ளியில் நடைபெற்றது.
சான்றிதழ்களை மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன் (தனியார் பள்ளிகள்) அசல் மதிப்பெண் மாணவர்களுக்கு வழங்கினார். பள்ளிப் பொருளாளர் ரத்னராஜா தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் தாழையப்பன், பால்ராஜ், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பிரபு அனைவரையும் வரவேற்றார்.
மாவட்டக்கல்வி அலுவலரின் வாழ்த்துரையின் போது, இன்றைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு கல்வி தான் முதன்மையானது. அந்த கல்வியை திறம்படக் கற்று வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லதொரு பிள்ளையாக வலம் வர வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் பயிற்றுவிக்கும் இருபால் ஆசிரியர்களும் அனைவரும் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


