» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மண்டல போட்டிகள்: நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் முதலிடம்!
வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 4:24:41 PM (IST)

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல போட்டிகளில் நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் தாளாளர் மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் கலந்து கொண்டு சுதந்திரதின உரை நிகழ்த்தினார்.
ஆட்டோ மொபைல் துறை தலைவர் ஜாண் வெஸ்லி உறுதிமொழி வாசித்தார். கணினி துறை இறுதி ஆண்டு மாணவி விஜயசாந்தி மற்றும் எந்திரவியல் துறை மாணவர் முத்துபழனி ஆகியோர் சுதந்திரம் குறித்து பேசினர்.மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் த்ரோ பால் போட்டியில் முதல் பரிசு மற்றும் செஸ் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் மாணவியர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட்டது.மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முடிவில் கல்லூரி பர்சர் தனபால் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியர் வெலிங்டன் தொகுத்து வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளரும், திருமண்டல லே செயலருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார் தனபால், உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


