» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி : நாசரேத் ஆசிரியர்களுக்கு சிஇஓ பாராட்டு!

திங்கள் 29, ஜூலை 2024 11:43:48 AM (IST)



அரசு பொதுத் தேர்வில் 12 மற்றும் 10ம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட பள்ளிக் கல் வித்துறையின் சார்பில் பாராட்டு விழா தூத்துக்குடி சுப்பையா வித் தியாலயம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 

100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்க ளுக்கும், வெவ்வேறு பாடப்பிரிவுக ளில்  100%  தேர்ச்சி கொடுத்த பத் தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண் டாம் வகுப்பு பாட ஆசிரியர்களுக் கும் கேடயங்கள் மற்றும் சான்றிதழ் கள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கலந்து கொண்டு ஆசிரி யர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர்களுக்கும், மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுப்பையா வித்தியாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தினி கெளசல், தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்ட கல்வி அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.முதன்மை கல்வி அலுவலரிடம் பாராட்டு சான்றிதழ்களைப் ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory