» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் சதுரங்கப் போட்டி!

செவ்வாய் 23, ஜூலை 2024 8:34:26 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச செஸ் தினத்தை முன்னிட்டு சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி உலக அளவில் சர்வதேச செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 11 வயது, 14 வயது, மற்றும் 17 வயது பிரிவினருக்கான சதுரங்க போட்டிகள் பள்ளி கலையரங்கத்தின் உட்பகுதியில் வைத்து நடைபெற்றன. பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் 102 மாணவர்கள் கலந்து கொண்டனர். 

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அடுத்த மாதம் நடைபெற இருக்கின்ற மண்டல அளவிலான போட்டிகளில் பங்கு பெற இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வ சுந்தர் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.போட்டிகளில் கலந்து கொண்ட சதுரங்க வீரர்களையும், ஏற்பாடுகளை செய்த ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் சுதாகர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து

JeswinImmanuelJul 24, 2024 - 10:25:41 PM | Posted IP 162.1*****

This photo was taken on 11 July

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory