» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மூக்குப்பீறி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்!
வியாழன் 30, நவம்பர் 2023 4:20:07 PM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் வழங்கினார்.
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மூக்குப்பீறி ஊராட்சி மன்ற தலைவர் கமலா கலையரசு தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் செல்வின் முன்னிலை வகித்தார்.
தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அர சின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிசிறப்புரையாற்றினார்.விழாவில் மொத்தம் 103 மாணவ, மாணவிக ளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட் டது.
இந்நிகழ்வில் திமுக வர்த்தக அணி மாநில இணை செயலாளர் உமரிசங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இராமஜெயம், ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மனும், திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பா ட்டு அணி அமைப்பாளருமான ஜனகர், திருச்செந்தூர் கோட்டாட்சியர் குருச் சந்திரன் ஏரல் வட்டாட்சியர்கைலாசகுமாரசாமி, ஆழ்வார்திருநகரி
வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியம்லீலா, மேலஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் செல்வின், தலைமை ஆசிரியர் எட்வர்ட், ஆசிரியர் காரட் காபிரியேல் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
புதன் 16, ஏப்ரல் 2025 11:03:04 AM (IST)

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)
