» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:27:49 PM (IST)

வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கு ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு நடைபெற்றது.
தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் நடந்த ஊக்கப்படுத்துதல் மெகா நிகழ்ச்சி ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு வாழ்த்துக்களுடன் நடைபெற்றது. மோட்டிவேஷன் அகாடமி சி.இ.ஓ. மற்றும் சர்வதேச மோட்டிவேஷன் பேச்சாளர் ஜெகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தரையில் இருந்து வானம் வரை படிப்பது தான் பொறியியல் கல்வி. கல்லூரியின் பொறியியல் துறை. அதில் சாதித்து காட்டுவது தான் சாதனை, மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வலியுறுத்தும் கருத்துக்கள், அவர்கள் சாதிக்க வேண்டிய பாதை, பெற்றோர்களை மதிப்பது போன்ற கருத்துக்களை பற்றி எடுத்துக்காட்டுகளுடன் பேசினார்.
மேலும், சர்வதேச அளவில் வாழ்வில் சாதனை படைத்தவர்களின் குறும்படத்தொகுப்பை மாணவர்களுக்கு காட்டினார். மாணவர்கள் முயற்சி, பயிற்சி, பேச்சு, மகிழ்ச்சி, வளர்ச்சி என்ற பயணத்தோடு நீங்கள் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து கல்லூரியில் சாதனை படைத்த கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன், பேராசிரியர்கள், துறை தலைவர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் கடின உழைப்பு, சாதனை மற்றும் திறமை போன்றவற்றுக்கு மேடையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், இயக்குனர்கள் ஜான் கென்னடி, முகமத் சாதிக் கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் விக்னேஷ் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் ரீட்ஸ் செயல்முறை விளக்க நிகழ்ச்சி!
வியாழன் 7, டிசம்பர் 2023 5:06:12 PM (IST)

மர்காஷிஸ் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதி வண்டிகள் வழங்கும் விழா!
புதன் 6, டிசம்பர் 2023 7:43:03 PM (IST)

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
புதன் 6, டிசம்பர் 2023 7:39:53 PM (IST)

மூக்குப்பீறி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்!
வியாழன் 30, நவம்பர் 2023 4:20:07 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம்
புதன் 29, நவம்பர் 2023 5:08:30 PM (IST)

மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவன் சிறப்பிடம்! .
சனி 25, நவம்பர் 2023 8:33:49 PM (IST)
