» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் சமூக மேம்பாட்டுத் திட்டப் பணிகள்!
சனி 23, செப்டம்பர் 2023 3:18:49 PM (IST)
தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரியின் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆங்கில ஆராய்ச்சித் துறை சார்பில் சமூக மேம்பாட்டுத் திட்டப் பணிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆங்கில ஆராய்ச்சித் துறை சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் 54 பேர் கொண்ட குழுவுடன் தருவைகுளத்திற்கு சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் உறுப்பினர்கள், இரண்டாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவர்கள், தத்தெடுக்கப்பட்ட கிராமமான தருவைகுளத்திற்குச் சென்று "உங்கள் தலைமுறையை காப்பாற்ற மரங்களை பாதுகாக்கவும்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள்.
கல்லூரி செயலாளர் சி.ஷிபானா, முதல்வர் ஜெஸ்ஸி பெர்னாண்டோ மற்றும் துணை முதல்வர் சகோதரி குளந்தை தெரேஸ் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆதரித்தனர். தருவைகுளம் புனித கேத்தரின் தொடக்கப்பள்ளியில் இந்திய புங்கை மரக்கன்றுகளை மாணவிகள் நட்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியை அருட் சாகோதரி ரெ. ஜி.ஆண்டனி செல்வ வனிதா, உதவி தலைமை ஆசிரியை ஏ.அகஸ்டின் வானதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர்.
வருங்கால சந்ததியினரைக் காப்பாற்ற மரங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சியை இரண்டாம் ஆண்டு ஆங்கில துறை மாணவிகள் ஏற்பாடு செய்தனர். பள்ளி உதவி தலைமையாசிரியர் சிறப்புரையாற்றி, கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், மற்றும் கல்லூரி நிர்வாகத்தினருக்கு நன்றி கூறினார்.