» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டி பள்ளியில் உலக காண்டாமிருக தின விழா : மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:06:09 PM (IST)



கோவில்பட்டி ஐ.சி.எம் நடுநிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் உலக காண்டாமிருகம் தினம் கடைபிடிக்கப்பட்டது 

காண்டாமிருகங்களை பற்றி மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அற்புதமான உயிரினங்களில் எஞ்சியிருப்பதை பாதுகாத்திடவும் செப் - 22ம் தேதி உலக காண்டாமிருகம் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  இதையொட்டி கோவில்பட்டி ஐ.சி.எம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் காண்டாமிருக மாஸ்க் அணிந்து காண்டா மிருகங்களை பாதுகாத்திடவும், காண்டாமிருகங்களுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்தவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ராதா தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். தேசிய பசுமைப்படை ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார். கோவில்பட்டி பசுமை இயக்க தலைவர்ஜெகஜோதி கலந்து கொண்டு உலக காண்டாமிருக தின விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் அபிலா திரேஸ், பத்மாவதி, செல்லம்மாள். சுப்புலட்சுமி, தனலட்சுமி, ஜெனி, சனோவோ உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory