» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத்: நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
செவ்வாய் 19, செப்டம்பர் 2023 7:54:51 PM (IST)

நல்லாசிரியர் விருது பெற்ற கீழக்கல்லாம்பாறை பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் நல்லாசிரியர் விருது வழங்கியது. இந்த விருதுக்கு குரும்பூர் அருகே உள்ள கீழக்கல்லாம்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ராஜாத்தி கிரசன்சியா தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் நடந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் ராஜாத்தி கிரசன்சியாவுக்கு விருது வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து கீழக்கல்லாம்பாறை கிராம மக்கள் மற்றும் பள்ளி நிர்வாக கமிட்டி சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராஜாத்தி கிரசன்சியாவுக்கு பாராட்டு விழா நடத்தியது. இதில் கிராமமக்களும், பள்ளி நிர்வாக கமிட்டியினரும் விருது பெற்ற ஆசிரியருக்கு நினைவு பரிசுகள் வழங்கினர். இதில் தென்திருப்பேரை டவுன் பஞ்., தலைவர் மணிமேகலை ஆனந்த், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் கிராமமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


