» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

வெள்ளி 14, ஜூலை 2023 12:44:40 PM (IST)



நாசரேத்தில் மாணவ, மாணவிகளு க்கு இலவச கல்வி உபகர ணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

கோயமுத்தூர் லைப்ரே பவுண்டேஷன் மற்றும் ஒலி வா பவுண்டேஷன் சார்பில் நாசரேத் - அகப்பைக்குளம் குழந்தைகள் இயேசுவுக்கே நிறுவனவளாகத்தில் நடைபெற்றது. விழாவினை ஓய்வுபெற்ற ஆசிரியை சாந்தி ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.நாசரேத் குழந்தைகள் இயேசுவுக்கு நிறுவனஸ் தாபகர் செல்லாபாய் செல்வராஜ் தலைமை தாங்கினார். லைப்ரே பவுண்டேஷன் ப்ராஜெக்ட் ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன், செல்வக்குமார் மற் றும் ஒலிவா பவுண்டேஷன் இயக்குனர் ஏர்னெஸ்ட் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

ஒலிவா பவுண்டேஷன் இயக்குனர் ஹைமா மாணவ,மாணவிகளிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். விழாவில் கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஸ்கூல் பேக், எழுதுப் பொருட்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளி ட்ட கல்வி உபகரணங்களை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை டெய்சி அல்பர்ட், குழந்தைகள் இயேசுவுக்கே நிறுவன உதவி இயக்குனர் ஆரோன், ஓய்வு பெற்ற ஆசிரியை லில்லி ஏசுநாமம் ஆகியோர் வழங்கினர். விழா முடிவில் ஆசிரியை வனஜா இறுதி ஜெபம் செய்தார். இவ்விழாவில் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory