» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மீன்வளக் கல்லூரியில் தேசிய மீனவ விவசாயிகள் தினம்

திங்கள் 10, ஜூலை 2023 5:21:11 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "தேசிய மீனவ விவசாயிகள் தினம்” அனுசரிக்கப்பட்டது.

தேசிய மீனவ விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "இறால் வளர்ப்பு முறைகள்” குறித்த மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை மீன் பண்ணையாளர்களுக்கு ஹரியானா - இந்திய வேளாண் திறன் குழுமத்தின் நிதியுதவியுடன் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் ப. அகிலன் துவக்கி வைத்தார். 

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மகாபலிபுரம், சென்னையில் அனுசரிக்கப்பட்ட மீனவ விவசாயிகள் தினத்தில் பண்ணையாளர்களும் இணையவழி மூலம்  கலந்துக் கொண்டனர்.  இப்பயிற்சியில் இறால் பண்ணை அமைத்தல், நீர்த்தர மேலாண்மை, நோய்தாக்கம், சந்தை நிலவரம் மற்றும் தொழில் முனைதல் குறித்த களப்பயிற்சியும் வழங்கப்பட இருக்கிறது. இப்பயிற்சியானது பேராசிரியர் மற்றும் தலைவர் சுஜாத்குமார், உதவி பேராசிரியர் கோ.அருள் ஒளி ஆகியோரால் நடத்தப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory