» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆயுதத்துடன் வந்த நபர் கைது: குற்றச் சம்பவத்தை முறியடித்த போலீஸாருக்கு டிஐஜி பாராட்டு!
வெள்ளி 26, ஜூன் 2026 8:44:01 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாகன தணிக்கையின் போது, ஆயுதத்துடன் வந்த நபரைக் கைது செய்து பெரும் குற்றச் சம்பவம் நடைபெறாமல் தடுத்த ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (ஜூன் 25) போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த நபர் ஒருவரைப் போலீசார் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தனர்.
அச்சோதனையில், அந்த நபர் ஏதோனும் ஒரு குற்றத்தைச் செய்யும் நோக்குடன் பயங்கர ஆயுதங்களை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சமயோசிதமாகச் செயல்பட்ட போலீசார் அந்த நபரைக் கைது செய்து, அவரிடமிருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். இதன்மூலம் அப்பகுதியில் நடக்கவிருந்த ஒரு பெரும் குற்றச் சம்பவம் முன்கூட்டியே தடுக்கப்பட்டது.
குற்றச் சம்பவம் நடைபெறாமல் தடுத்து, மெச்சத்தக்க வகையில் மிகச் சிறந்த காவல் பணியை மேற்கொண்ட ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல்குமார், முதல் நிலை காவலர்கள் சிவப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், அருண்பாண்டியன் மற்றும் காவலர் சுந்தரபாண்டியன் ஆகியோரைத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு இன்று நேரில் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் அருகே கஞ்சா விற்பனை: வாலிபர் கைது!
வெள்ளி 26, ஜூன் 2026 8:39:53 PM (IST)

தாமிரபரணி சீரமைப்புப் பணிக்காகத் தனது முதல் மாதச் சம்பளத்தை வழங்கினார் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ!
வெள்ளி 26, ஜூன் 2026 8:15:08 PM (IST)

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: காவல் துறையின் விழிப்புணர்வு பாடல் வெளியீடு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:49:15 PM (IST)

தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த கோரிக்கை: சிஐடியு பேரவையில் தீர்மானம்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:45:49 PM (IST)

கரன்சி டிரேடிங் பெயரில் ரூ.24.64 லட்சம் மோசடி: இருவர் கைது - ரூ.3 லட்சம் மீட்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:06:22 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் - நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்!
வெள்ளி 26, ஜூன் 2026 4:51:59 PM (IST)








