» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் அருகே கஞ்சா விற்பனை: வாலிபர் கைது!

வெள்ளி 26, ஜூன் 2026 8:39:53 PM (IST)

திருச்செந்தூர் கீழ நாலுமூலைகிணறு பகுதியில் விற்பனைக்காகச் சட்டவிரோதமாகக் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்து, அவரிடமிருந்து 125 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் பொருட்டுப் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழ நாலுமூலைகிணறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரைப் பிடித்துப் போலீசார் சோதனை நடத்தினர்.

அச்சோதனையில், அவர் விற்பனைக்காகச் சட்டவிரோதமாகக் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்ற சஞ்சய் (22) என்பவரைத் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மதுரை வீரன் கைது செய்து வழக்குப்பதிவு செய்தார். மேலும், அவரிடமிருந்த 125 கிராம் கஞ்சா போதைப்பொருளையும் போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory