» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: காவல் துறையின் விழிப்புணர்வு பாடல் வெளியீடு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:49:15 PM (IST)

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி சரக காவல்துறை சார்பாக தயாரிக்கப்பட்ட "மாறு" என்ற விழிப்புணர்வு பாடல் இன்று வெளியிடப்பட்டது.
நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு இப்பாடலை வெளியிட, அதனைத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் பெற்றுக் கொண்டார். இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர், மாவட்ட ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிகாரிகள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை எடுத்துரைத்ததுடன், வரும் தலைமுறையினரைக் காக்கவும், போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் ஒன்றிணைந்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆயுதத்துடன் வந்த நபர் கைது: குற்றச் சம்பவத்தை முறியடித்த போலீஸாருக்கு டிஐஜி பாராட்டு!
வெள்ளி 26, ஜூன் 2026 8:44:01 PM (IST)

திருச்செந்தூர் அருகே கஞ்சா விற்பனை: வாலிபர் கைது!
வெள்ளி 26, ஜூன் 2026 8:39:53 PM (IST)

தாமிரபரணி சீரமைப்புப் பணிக்காகத் தனது முதல் மாதச் சம்பளத்தை வழங்கினார் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ!
வெள்ளி 26, ஜூன் 2026 8:15:08 PM (IST)

தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த கோரிக்கை: சிஐடியு பேரவையில் தீர்மானம்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:45:49 PM (IST)

கரன்சி டிரேடிங் பெயரில் ரூ.24.64 லட்சம் மோசடி: இருவர் கைது - ரூ.3 லட்சம் மீட்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:06:22 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் - நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்!
வெள்ளி 26, ஜூன் 2026 4:51:59 PM (IST)








