» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் - நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்!
வெள்ளி 26, ஜூன் 2026 4:51:59 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று அரசு விடுமுறை தினத்தை முன்னிட்டுப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காகக் குவிந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று அதிகாலை முதலே திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். அவர்கள் கடலிலும், கோவிலில் உள்ள நாழிக்கிணறு தீர்த்தத்திலும் புனித நீராடினர். விடுமுறை தினம் என்பதால் பொதுத் தரிசன வழியில் சாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் ரயில்வே யார்டு பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்செந்தூரில் இருந்து நெல்லை மார்க்கமாக இயக்கப்படும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால், வெளியூர்களில் இருந்து ரயிலில் வந்திருந்த ஆன்மீகப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உரிய போக்குவரத்து வசதியின்றி கடும் அவதிக்குள்ளாகினர்.
இன்று வெள்ளிக்கிழமை மொஹரம் விடுமுறையைத் தொடர்ந்து, நாளை சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி விடுமுறை நாட்கள் வருவதால், அடுத்த இரண்டு நாட்களுக்கும் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆயுதத்துடன் வந்த நபர் கைது: குற்றச் சம்பவத்தை முறியடித்த போலீஸாருக்கு டிஐஜி பாராட்டு!
வெள்ளி 26, ஜூன் 2026 8:44:01 PM (IST)

திருச்செந்தூர் அருகே கஞ்சா விற்பனை: வாலிபர் கைது!
வெள்ளி 26, ஜூன் 2026 8:39:53 PM (IST)

தாமிரபரணி சீரமைப்புப் பணிக்காகத் தனது முதல் மாதச் சம்பளத்தை வழங்கினார் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ!
வெள்ளி 26, ஜூன் 2026 8:15:08 PM (IST)

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: காவல் துறையின் விழிப்புணர்வு பாடல் வெளியீடு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:49:15 PM (IST)

தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த கோரிக்கை: சிஐடியு பேரவையில் தீர்மானம்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:45:49 PM (IST)

கரன்சி டிரேடிங் பெயரில் ரூ.24.64 லட்சம் மோசடி: இருவர் கைது - ரூ.3 லட்சம் மீட்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:06:22 PM (IST)








