» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மீண்டும் மாற்றம்: மணியாச்சிக்கு பதில் தாழையூத்து வரை இயக்க முடிவு!

வெள்ளி 26, ஜூன் 2026 4:35:34 PM (IST)



தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் அறிவிக்கப்பட்டிருந்த தற்காலிக மாற்றத்தில் தெற்கு ரயில்வே புதிய திருத்தம் கொண்டுவந்துள்ளது.

கடந்த 11-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலி - வாஞ்சி மணியாச்சி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு, வாஞ்சி மணியாச்சியுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு, ரயில் சேவை திருநெல்வேலி - தாழையூத்து இடையே மட்டும் பகுதி ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புதிய ரயில் சேவை விபரங்கள்:

வண்டி எண் 12631 (சென்னை - நெல்லை): சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஜூன் 27) இரவு 8:50 மணிக்கு புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், தாழையூத்து ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். இந்த ரயில் தாழையூத்து - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 12632 (நெல்லை - சென்னை): மறுநாள் (ஜூன் 28) திருநெல்வேலியில் இருந்து இரவு 8:50 மணிக்கு புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலிக்கு பதிலாக தாழையூத்து ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9:00 மணிக்குச் சென்னை நோக்கிப் புறப்படும். இந்த ரயில் திருநெல்வேலி - தாழையூத்து இடையே ரத்து செய்யப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory