» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பரந்தூர் பாணியில் நீதி கேட்கும் பொட்டலூரணி மக்கள்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை..!
புதன் 24, ஜூன் 2026 12:34:06 PM (IST)

முதலமைச்சர் விஜய், பரந்தூர் மக்களுக்கு வழங்கியது போல பொட்டலூரணியில் கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிராகத் தொடர்ந்து 772 நாட்களாகப் போராடி வரும் மக்களுக்கும் உடனடியாக நீதி வழங்க வேண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் இயங்கி வரும் கழிவுமீன் நிறுவனங்களால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்நிறுவனங்களுக்கு எதிராக அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்றுடன் (24.06.2026) இவர்களின் அறப்போராட்டம் வெற்றிகரமாக 772 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு, கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக் குழுவினர் சார்பில் அப்பகுதியில் விழிப்புணர்வுப் பேனர் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
அப்பதாகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புகைப்படத்தைக் குறிப்பிட்டு, "பரந்தூர் மக்களுக்கு நீதி வழங்கியது போல், (24.06.26) அன்றுடன் 772 நாள்களாகப் போராடும் பொட்டலூரணி மக்களுக்கும் நீதி வழங்குங்கள்!" எனப் போராட்டக் குழுவினர் தங்களது பிரதான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்தத் தொடர் போராட்டம் மற்றும் பதாகை அறிவிப்பு இப்பகுதியில் தற்போது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 24, ஜூன் 2026 9:58:18 PM (IST)

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம்: திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!
புதன் 24, ஜூன் 2026 8:49:49 PM (IST)

பேய்குளம் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை!!
புதன் 24, ஜூன் 2026 8:24:07 PM (IST)

சட்டவிரோத மது விற்பனை: இருவர் அதிரடி கைது!
புதன் 24, ஜூன் 2026 7:56:37 PM (IST)

வழக்குகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது : அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சவால்!
புதன் 24, ஜூன் 2026 5:53:38 PM (IST)

தூத்துக்குடியை எழில்மிகு நகரமாக்கப் புதிய திட்டம்: மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை!
புதன் 24, ஜூன் 2026 5:41:11 PM (IST)








