» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேய்குளம் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை!!
புதன் 24, ஜூன் 2026 8:24:07 PM (IST)

பேய்குளம் கடைவீதி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் இன்று வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் அதிரடியாக அகற்றப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் பேய்குளம் கடைவீதி பகுதியில் தனிநபர்கள் செய்திருந்த ஆக்கிரமிப்புகளாலும், பேருந்து நிறுத்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களாலும் அன்றாடப் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்படுவதாகச் சாத்தான்குளம் வட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் அனுப்பி வந்தனர்.
இப்புகார்களின் அடிப்படையில், கடந்த வாரம் பேய்குளம் கடைவீதிப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத மாற்று இடத்தில் வாகனங்களை நிறுத்துமாறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அப்பகுதியில் துல்லியமாக நில அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி தலைமையில், நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் கோமதி சங்கரி, இளநிலைப் பொறியாளர் சிவ சண்முகநாதன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இன்று புதன்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் போது சில தனிநபர்கள் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், வருவாய்த்துறை அளவீடு செய்த எல்லையின்படி கடைவீதி ஆக்கிரமிப்புகள் அனைத்தும் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன. பணிகள் நிறைவடைந்த பின், இப்பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 24, ஜூன் 2026 9:58:18 PM (IST)

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம்: திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!
புதன் 24, ஜூன் 2026 8:49:49 PM (IST)

சட்டவிரோத மது விற்பனை: இருவர் அதிரடி கைது!
புதன் 24, ஜூன் 2026 7:56:37 PM (IST)

வழக்குகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது : அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சவால்!
புதன் 24, ஜூன் 2026 5:53:38 PM (IST)

தூத்துக்குடியை எழில்மிகு நகரமாக்கப் புதிய திட்டம்: மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை!
புதன் 24, ஜூன் 2026 5:41:11 PM (IST)

வேலைவாய்ப்பு தரும் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்: ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுரை!
புதன் 24, ஜூன் 2026 4:31:49 PM (IST)








