» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

புதன் 10, ஜூன் 2026 12:48:48 PM (IST)



தூத்துக்குடி பெரிய காட்டன் ரோட்டில் பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோத விளம்பரப் பதாகைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றியுள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட மேல பெரிய காட்டன் ரோடு பகுதியில், வணிக நிறுவனங்கள் மற்றும் சில தனிநபர்களால் சாலைப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்திற்குத் தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்தச் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பொதுமக்களும், பள்ளி - கல்லூரி வாகனங்களும் பெரும் அவதிக்குள்ளாகி வந்தன.

இதனைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சி டவுன் பிளானிங் செயற்பொறியாளர் முனீர் அகமது தலைமையில் மாநகராட்சி உதவி அதிகாரிகள் அணு தேவி பிரியா முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று காலை நடைபெற்றது. 

இப்பணியின் போது, சாலைகளின் இரு ஓரங்களையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த வணிக நிறுவனங்களின் தற்காலிகக் கடைகள், நடைபாதை நீட்டிப்புகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அனைத்தும் மாநகராட்சிப் பணியாளர்களால் அதிரடியாக அகற்றப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இனிவரும் காலங்களில் சாலைப் பகுதிகளை ஆக்கிரமித்து விளம்பரப் பலகைகளோ அல்லது கடைகளோ வைத்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படுவதோடு, சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என டவுன் பிளானிங் அதிகாரிகள் வணிகர்களுக்குக் கடுமையான எச்சரிக்க விடுத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு அப்பகுதிச் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINJun 13, 2026 - 12:04:43 PM | Posted IP 104.2*****

நகரின் பல இடங்களில் நடை மேடைகளையும் தாண்டி பிரதான சாலைகளின் மேல் மின் விளக்குகளோடு கூடிய விளம்பர போர்டுகள் வைக்கப்படுகிறது ஆபத்தான இவற்றை அப்புறப்படுத்த வேண்டுகிறேன்

ManjuJun 11, 2026 - 07:21:34 PM | Posted IP 162.1*****

பெரும்பாலான வீடுகளில் வாசலில் ரம் போட்டு இருக்காங்க அதையும் கிளியர் பண்ணி தாங்க

M KrishnanJun 11, 2026 - 05:40:49 PM | Posted IP 104.2*****

Please do the action in bryant nagar and chidambaram nagar also

sreeja jJun 11, 2026 - 10:10:52 AM | Posted IP 172.7*****

M.saveriyarpuram RC Church santhu full of waste and alcohol bottles.please place order to remove it and control people to put waste only waste truck.please ordered this immediately.

மு. கணேசன்Jun 11, 2026 - 06:09:53 AM | Posted IP 162.1*****

எங்க பாதி இடம் ஆக்கிரமிப்புல தான் இருக்கு இதை கேட்க யாரும் வருவா

ராஜாJun 10, 2026 - 08:28:26 PM | Posted IP 104.2*****

ரயில் நிலையம் அருகில் உள்ள காரா பேட்டை வாசரின் முன்பு ஒரு கடை கட்டப்பட்டு இருக்கிறது இப்பொழுது அதன் படிகள் கால்வாயின் மேலே இருக்குது மக்கள் டிராட்பார்மில் நடந்த செல்ல முடியாமல் உள்ளது அதை சரி படுத்தவும்

RambabuJun 10, 2026 - 06:47:50 PM | Posted IP 162.1*****

VE Road eppo varuvinga....

THAMILANJun 10, 2026 - 01:23:49 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி பெருமாள் கோவில் தெருவில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. கோவில் பூஜை பொருட்கள் விற்கும் கடை சாலையின் மைய பகுதி வரை வந்து விட்டது. அந்த பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory