» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை : முன்னாள் மாணவர்கள் வழங்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:30:21 PM (IST)

தூத்துக்குடியில் பழம்பெரும் கல்வி நிறுவனமான கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 1989 முதல் 1996 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில், நடப்பு ஆண்டிற்கான ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களின் சமூகப் பொறுப்பினை உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும் ஏழை எளிய மாணவர்களின் கல்விச் செலவிற்காக நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஏழாம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, கடந்த 07.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
இவ்விழாவில், வறுமை மற்றும் குடும்பச் சூழல் காரணமாகக் கல்வியைத் தொடர சிரமப்படும் 40-க்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் ஆதரவற்ற ஏழை எளிய மாணவ, மாணவிகளைத் தகுதியின் அடிப்படையில் கண்டறிந்து, அவர்களுக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை முறைப்படி பிரித்து வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்குத் தூத்துக்குடி நிலா சீஃபுட்ஸ் மேலாண்மை இயக்குநர் செல்வின் பிரபு தலைமை தாங்கி, மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையினை வழங்கினார். பள்ளித் தாளாளர் ரவி ராஜ், தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் ஜெயபால், ஆல்பர்ட் மற்றும் செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னதாக, முன்னாள் மாணவர் குழுத் தலைவர் கிருபானந்த முருகன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகப் பேராசிரியர் வில்லியம்ஸ் தர்மராஜ் வருகை தந்து, கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் எதிர்கால இலக்குகள் மற்றும் கல்வி முக்கியத்துவம் குறித்துப் பேசினார். தொடர்ந்து, முன்னாள் மாணவர் குழுச் செயலாளர் லாரன்ஸ் இந்த அறப்பணியின் ஓராண்டு காலச் செயல்பாடுகள் குறித்த ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறும் மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் தூத்துக்குடி நகரின் முக்கியப் பிரமுகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். விழாவின் நிறைவாக, குழுச் செயலாளர் அந்தோணிசாமி வந்திருந்த அனைவருக்கும் நன்றியுரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:59:15 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)

புகைப்படத்தைக் காட்டி மிரட்டிய விவகாரம்: பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
வெள்ளி 17, ஜூலை 2026 8:32:39 AM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)

பஜாரில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய நபர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 7:57:17 AM (IST)

ஜவுளிக் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு: பெண் உள்பட 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 17, ஜூலை 2026 7:37:15 AM (IST)









JebaJun 9, 2026 - 11:01:09 PM | Posted IP 104.2*****