» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது!

புதன் 4, மார்ச் 2026 8:30:14 AM (IST)

ஆறுமுகநேரியில் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்க ராஜா மற்றும் போலீசார் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேயன்விளை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே நபர் ஒருவர் கஞ்சா விற்பதாகப் போலீசாருக்குத் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

பள்ளிக்கூடம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒரு நபர், போலீசாரைப் பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றார். அவரை விடாமல் துரத்திப் பிடித்த போலீசார் சோதனையிட்டபோது, அவரிடம் சிறிய பிளாஸ்டிக் பைகளில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆறுமுகநேரி பாரதி நகர் மேலத்தெருவைச் சேர்ந்த மகாராஜா மகன் செல்லத்துரை (36) என்பதும், அவர் கூலித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது. பள்ளி அருகே கஞ்சா விற்றதை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து, ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory