» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 10 மாடி காவலர் குடியிருப்பு திறப்பு விழா : எஸ்பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்!

புதன் 4, மார்ச் 2026 4:04:36 PM (IST)



தூத்துக்குடி பிரையன்ட் நகரில் 100 வீடுகள் கொண்ட காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர்  ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாகத்  திறந்து வைத்தார்.

தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் (திருநெல்வேலி கோட்டம்) மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 10 மாடி அடுக்குமாடி காவலர் குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். மொத்தம் 100 வீடுகளைக் கொண்ட இந்த நவீன குடியிருப்புகள், காவலர்களின் நலன் கருதி அரசு உத்தரவின் பேரில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் தொடக்க விழாவைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், புதிய குடியிருப்பில் குத்துவிளக்கேற்றி முறைப்படி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் குமரேசன், தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் ராகுல் வி.கோபால், நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட முக்கியப் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory