» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை அருகே கூட்டம், கூட்டமாக வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்!

செவ்வாய் 20, ஜனவரி 2026 8:03:08 PM (IST)



நெல்லை அருகே உள்ள வடக்கு கழுநீர் குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வந்துள்ளன. அவை மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கத்தை தொடங்கின.

பறவைகள் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, தங்களது இனப்பெருக்கத்துக்கு சாதகமான இடங்களுக்கு வலசை செல்வது வழக்கம். அந்த வகையில் மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் கடும் பனி நிலவும் மாதங்களில் அவை தென் இந்தியாவுக்கு வருகிறது.

குறிப்பாக அக்டோபர் மாதம் கூட்டம், கூட்டமாக தமிழகத்துக்கு வரும் பறவைகள் நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், திருப்புடைமருதூர் பறவைகள் பாதுகாப்பகம், விஜயநாராயணம், கங்கைகொண்டான், ராஜவல்லிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்களில் காணப்படும். இதேபோல் நெல்லை அருகே உள்ள வடக்கு கழுநீர்குளம் குளத்திலும் செங்கால் நாரை, குமிழ் வாய் வாத்து, வரித்தலை வாத்து உள்பட பல்வேறு வெளிநாட்டு பறவைகள் வலசை வந்துள்ளன. 

கூழக்கடா பறவைகளும் அங்கு அதிகளவு காணப்படுகிறது. இவை ஈர நிலங்கள், அதை சார்ந்துள்ள பசுமையான வயல் வெளிகளில் உணவு தேடுவதுடன், அங்குள்ள மரங்களிலும் கூடுகட்டி இனப்பெருக்கத்தை தொடங்கி உள்ளன. முட்டையிட்டு குஞ்சுபொரித்து குஞ்சுகளுடன் வருகிற மார்ச் மாதம் முடிந்த பிறகு மீண்டும் மத்திய ஆசிய பகுதிகளுக்கு திரும்பி சென்று விடும் என்று வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory