» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஷஃபான் பிறை: பிப்.3ல் பராஅத் இரவு அனுசரிப்பு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:13:07 PM (IST)
தமிழகத்தில் பிப்.3ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பரக்கத்துகள் நிறைந்த பராஅத் இரவு அனுசரிக்கப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று (19-01-2026, திங்கட்கிழமை) ஹிஜ்ரீ 1447 ஷஃபான் மாத பிறை தென்படவில்லை. இதனால் ரஜப் மாதம் 30 நாள்களாக பூர்த்தி செய்யப்படுவதாகவும், வருகிற 21-01-2026 புதன்கிழமை ஷஃபான் பிறை 1 தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 03-02-2026 செவ்வாய்க்கிழமை மாலை பின்னேரம் (ஷஃபான் பிறை 15) பரக்கத்துகள் நிறைந்த பராஅத் இரவு அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 04-02-2026 புதன்கிழமை நிஸ்ஃபு ஷஃபான் தினமாகும் என்றும், அன்றைய தினம் சுன்னத்தான நோன்பு நோற்கும் நாள் எனவும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாஅத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து வ.உ.சி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 6, மார்ச் 2026 11:29:00 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 14-ல் தேசிய மக்கள் நீதிமன்றம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:12 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் கோவிலில் ரூ.1.28 கோடியில் புதிய தேர் : பூமிபூஜையுடன் பணிகள் தொடக்கம்
வெள்ளி 6, மார்ச் 2026 8:32:59 AM (IST)

மணப்பாடு அருகே 73 கிலோ எடையுள்ள ராட்சத சுறா சிக்கியது: ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:22:01 AM (IST)

தூத்துக்குடியில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்: கடத்தல் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 6, மார்ச் 2026 8:11:25 AM (IST)

திமுக செயற்குழு கூட்டம்: அமைச்சர் பி. கீதா ஜீவன் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 8:07:37 AM (IST)









