» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக செயற்குழு கூட்டம்: அமைச்சர் பி. கீதா ஜீவன் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 8:07:37 AM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ மற்றும் மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதா ஜீவன், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளதைச் சுட்டிக்காட்டினார். வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக அரசின் சாதனைகளையும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தமிழக அரசின் பெருமையையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார்.
இந்தச் செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எழுச்சியுடன் கூடிய சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், திருச்சியில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில் வடக்கு மாவட்டத்திலிருந்து அதிகப்படியான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்வது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாணிக்கராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)









