» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் : 600பேர் கைது

செவ்வாய் 20, ஜனவரி 2026 12:35:56 PM (IST)


முழுநேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

2021 தேர்தல் வாக்குறுதியின்படி சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், அமைப்பாளருக்கு ₹5 லட்சமும், சமையல் உதவியாளருக்கு ₹3 லட்சமும் பணிக் கொடையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 20 முதல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும், ஜனவரி 24, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி தூத்துக்குடியில் இன்று சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக அரசு ஊழியர்கள் சங்கம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆனந்த செல்வம், அன்னம்மாள், வேல்முருகன், இணைச் செயலாளர்கள் பாஸ்கர், பிளாரன்ஸ் முத்துமணி, மோகனா, விஜயராணி, பொன்னரசி, செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் பேரணியாக புறப்பட்டு பாளையங்கோட்டை ரோடு அம்பேத்கர் சிலை அருகில் நடுரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி 600-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மறியல் காரணமாக தூத்துக்குடி - பாளையங்கோட்டை பிரதான சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory