» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஏரல் வட்டத்தில் 2 நாட்கள் ஆட்சியர் ஆய்வு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:00:45 PM (IST)
ஏரல் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் ஜன.21 மற்றும் 22 ஆகிய நாட்களில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொள்கிறார்.
தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஏரல் வட்டத்தில் 21.01.2026 அன்று தங்கி முகாமிட்டு ஏரல் வட்டத்திலுள்ள அனைத்து துறை அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்கள்.
அன்றைய தினம் மதியம் 2.30 முதல் 4.30 வரை மாவட்ட ஆட்சியர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில பெற்றுக் கொள்வார். அதன் பின்; மாலை 04.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி முற்பகலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட கள பயணங்கள் / அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டு அறிவார்கள்.
மீண்டும் நகர்ப்புறம் / கிராம ஊராட்சிகள் பகுதிகளுக்குச் சென்று பல்வேறு அரசு துறைகளின் சேவை வழங்குதல் / திட்ட செயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்ய உள்ளார்கள். அன்றைய இரவு அவ்வட்டத்திலேயே மாவட்ட ஆட்சித் தலைவர்; மற்றும் அனைத்து அலுவலர்களும் தங்கி மறுநாளான 22.01.2026 அன்று அதிகாலை அடிப்படை வசதிகளான குடிநீர் / சுகாதாரம் / தூய்மை / போக்குவரத்து / முதல்வர் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.
மக்கள் இருப்பிடம் தேடி சேவை அளிக்கும் வகையிலும் களஆய்வின் போது கண்டறியப்பட்ட அவ்வட்ட மக்களின் தேவைகள் குறித்த முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைத்திடும் வகையிலும் உருவாக்கம் செய்யப்பட்டுள்ள ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமின் போது பொது மக்கள், தங்கள் வாழ்விட முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களையும், கோரிக்கை மனுக்களையும் வழங்கிடலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஏரல் வட்டத்தில் 21.01.2026 அன்று தங்கி முகாமிட்டு ஏரல் வட்டத்திலுள்ள அனைத்து துறை அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்கள். அன்றைய தினம் மதியம் 2.30 முதல் 4.30 வரை மாவட்ட ஆட்சியர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில பெற்றுக் கொள்வார். அதன் பின்; மாலை 04.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி முற்பகலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட கள பயணங்கள் / அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டு அறிவார்கள்.
மீண்டும் நகர்ப்புறம் / கிராம ஊராட்சிகள் பகுதிகளுக்குச் சென்று பல்வேறு அரசு துறைகளின் சேவை வழங்குதல் / திட்ட செயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்ய உள்ளார்கள். அன்றைய இரவு அவ்வட்டத்திலேயே மாவட்ட ஆட்சித் தலைவர்; மற்றும் அனைத்து அலுவலர்களும் தங்கி மறுநாளான 22.01.2026 அன்று அதிகாலை அடிப்படை வசதிகளான குடிநீர் / சுகாதாரம் / தூய்மை / போக்குவரத்து / முதல்வர் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.
மக்கள் இருப்பிடம் தேடி சேவை அளிக்கும் வகையிலும் களஆய்வின் போது கண்டறியப்பட்ட அவ்வட்ட மக்களின் தேவைகள் குறித்த முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைத்திடும் வகையிலும் உருவாக்கம் செய்யப்பட்டுள்ள ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமின் போது பொது மக்கள், தங்கள் வாழ்விட முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களையும், கோரிக்கை மனுக்களையும் வழங்கிடலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரடி விசாரணை
புதன் 4, மார்ச் 2026 8:14:22 PM (IST)

தூத்துக்குடி வருகை தரும் துணை முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் முடிவு?
புதன் 4, மார்ச் 2026 8:08:03 PM (IST)

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி
புதன் 4, மார்ச் 2026 5:27:54 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

தூத்துக்குடியில் 10 மாடி காவலர் குடியிருப்பு திறப்பு விழா : எஸ்பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்!
புதன் 4, மார்ச் 2026 4:04:36 PM (IST)

ரூ.2 கோடி பேவர் பிளாக் நடைபாதை இரண்டே ஆண்டுகளில் சிதிலம்: பாஜக கடும் கண்டனம்
புதன் 4, மார்ச் 2026 4:02:30 PM (IST)