» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பட்டணமருதூர் வட்டெழுத்து கல்வெட்டு குறிப்பிடும் கோஞ்சடே, கோச்சடையான் இருவேறு மன்னர்களா?

செவ்வாய் 20, ஜனவரி 2026 11:09:23 AM (IST)


பட்டணமருதூர் வட்டெழுத்து கல்வெட்டு குறிப்பிடும் பாண்டியர் 'கோஞ்சடே' மற்றும் கோச்சடையான் இருவரும் வெவ்வேறு மன்னர்களா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர்  பெ.ராஜேஷ் செல்வரதி கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "வட்டெழுத்து கல்வெட்டின் கால கட்டம் பொ.ஊ.3ம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பித்து 10ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இத்தகைய ‘ஈரெழுத்து சொற்கள்’ மூலம் பொருள்பட எழுதப்பட்ட இந்த கல்வெட்டு எந்த காலகட்டத்தின் இலக்கணம் அடிப்படையில் உள்ளது என்றும், ஒருவேளை நாம் அறியாத 'கோஞ்சடே' என்று வேறோர் பாண்டிய மன்னன் 3-8ம் நூற்றாண்டின் இடைப்பட்ட முற்கால பாண்டியர்களின் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்றும்,

பொதுவாக சங்க இலக்கியங்களில் சிவபெருமானின் மூன்று குணங்கள் நிறைந்த விதத்தை 'குணை' என்றும், பார்வதி அல்லது காளி தேவியை 'அமலா' என்றும், திருமால் மலைமகள் உடன் உறையும் இடத்திற்கு 'மாலறை' என்றும் அழைப்பது வழக்கம். இவற்றை சேர்த்து 'உ' என்ற மங்கள சொல்லோடு ஆரம்பம் ஆகும் இந்த கல்வெட்டு 'குணை லமலோ மாலறை' என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும்,

இருள் சூழ்ந்த சேஷன் போன்ற படம் எடுக்கும் பாம்பின் உறைவிடம் 'பைமைழுறை' என அழைக்கப்படலாம் என்றும், இத்தகைய அமைப்புகள்  நிறைந்த மிகப்பெரிய ஆலயத்தின் ஆபரணங்கள் வைக்கும் கருவூல அறையானது 'நூவ்லறை' என அழைக்கப்பட்டு இருந்திருக்கலாம். இந்த நூவ்லறை வாசலின் வாடா விளக்கு வகைக்காக சில நிலங்கள் தானமாகவோ! வரிவிலக்காகவோ! இந்த கோஞ்சடே எனப்படும் பாண்டிய மன்னன் 'இறைஇலி ளடைச்சறை' வழங்கி இருக்கிறார் என்றும்,

பாண்டவர்கள்தான் பாண்டியர்கள் என ஓர் கருத்து நிலவுவதை உண்மையாக்கிடும் விதமாக இந்த மன்னனை 'மா ஏண் ஐவர் வுடை கோஞ்சடே' என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். இதற்கு ஆதாரமாக பொ.ஊ 770ம் ஆண்டின் வேல்விக்குடி செப்பேட்டில் பாண்டியர்கள் தங்களை விருஷிணி குல மன்னர்கள் என்றே குறிப்பிடுகிறார்கள் என்றும்

அவர் பின்னாலில் தவமிருந்து ஐம்புலன்களையும் ஒடுக்கி 'ரொடு ஆசய' என ஜீவசமாதி நிலையினை அடைந்திருக்க, இந்த ஜீவசமாதி யின் மீது முற்கால பாண்டியர்களின் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும்,

இவர் தனியே அல்லது 'கிருவீ' என சிவனின் மகன்களில் ஒருவரான விநாயகர் சகிதம் இருந்து அருள்பாலிக்கும் இடமாக இந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட பட்டினமருதூர் ஸ்ரீ வீரபாண்டிய விநாயகர் ஆலயம் கருதப்பட்டிருக்க வேண்டும்....



மேலே குறிப்பிட்ட காளி மற்றும் பாம்பின் அடையாளம் என இரண்டு மணல் கலவையால் செய்யப்பட்ட இரண்டு திருமேனிகள் இந்த ஆலயத்தின் கல்வெட்டு எடுக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்தது என்பதும், சமீபத்தில் அவை அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் பூசாரிகளின் வாக்குமூலம்.

எனவே மண்ணில் புதையுண்டுள்ள இந்த கல்வெட்டின் சிதைவுற்ற பின்பகுதியினை கண்டெடுத்தால் தெளிவான காலகட்டத்தோடு இந்த தானங்கள் விபரம் மற்றும் இந்த நகரத்தின் பெயர் குறித்த விபரங்களை அறிய இயலும் என்று தனது ஆய்வின் புரிதல்களை தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory