» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சொன்ன சொல்லை காப்பாற்றும் இயக்கம் அதிமுக : கடம்பூர் செ. ராஜூ எம்எல்ஏ பேச்சு!

திங்கள் 19, ஜனவரி 2026 4:05:07 PM (IST)


2026ல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப போவது அவர்கள் தேர்தல் அறிக்கை தான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ எம்எல்ஏ பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ. ராஜூ கலந்து கொண்டு பேசுகையில் "சொன்ன சொல்லை காப்பாற்றும் இயக்கம் அதிமுக, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இனி மகளிர் அனைவரும் தங்களது வாக்குகளை இரட்டை இலை சின்னத்தை தவிர வேற யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலைதான் இன்றைக்கு தமிழக தேர்தல் களம் உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆட்சியில் இருக்கும் போது நிறைவேற்றாமல் எல்லாம் முடிந்து வீட்டுக்குப் போகும்போதுதான் நிறைவேற்றும் நிலை நான்கு ஆண்டுகள் கழித்து நிறைவேற்றும் நிலை என்று பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்எல்ஏ மோகன், ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன், தனவதி, முனியசத்தி ராமச்சந்திரன், மகேஷ், பால்ராஜ், நகர செயலாளர்கள் மாரிமுத்து, ஆண்டி உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

BalaJan 23, 2026 - 04:43:01 PM | Posted IP 162.1*****

ADMK katchiyai adagu vachu romba naal aachu

AntonyJan 20, 2026 - 11:05:11 AM | Posted IP 162.1*****

Comedy News over

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory