» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மது போதையில் அரசு பேருந்தை இயக்கிய டிரைவர் கைது
திங்கள் 19, ஜனவரி 2026 11:05:35 AM (IST)
தூத்துக்குடியில் மது போதையில் அரசு பேருந்தை இயக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை நாசரேத் நோக்கி சென்ற அரசு பேருந்தை தற்காலிக டிரைவரான புதியம்புத்தூரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் ரமேஷ் (36) என்பவர் இயக்கிச் சென்றார். பேருந்தில் 42 பயணிகள் இருந்தனர். முத்தையாபுரம் அருகே வந்தபோது பேருந்து தாறுமாறாக சென்றதாக தெரிகிறது.

இதையடுத்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையிலான போலீசார் பேருந்தை நிறுத்தி விசாரித்தபோது டிரைவர் ரமேஷ், மது போதையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டிரைவரை கைது செய்தனர். மேலும் மாற்று டிரைவர் மூலம் பேருந்து இயக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட டிரைவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரடி விசாரணை
புதன் 4, மார்ச் 2026 8:14:22 PM (IST)

தூத்துக்குடி வருகை தரும் துணை முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் முடிவு?
புதன் 4, மார்ச் 2026 8:08:03 PM (IST)

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி
புதன் 4, மார்ச் 2026 5:27:54 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

தூத்துக்குடியில் 10 மாடி காவலர் குடியிருப்பு திறப்பு விழா : எஸ்பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்!
புதன் 4, மார்ச் 2026 4:04:36 PM (IST)

ரூ.2 கோடி பேவர் பிளாக் நடைபாதை இரண்டே ஆண்டுகளில் சிதிலம்: பாஜக கடும் கண்டனம்
புதன் 4, மார்ச் 2026 4:02:30 PM (IST)