» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பெருமாள்சாமி நியமனம்
திங்கள் 19, ஜனவரி 2026 7:33:44 AM (IST)
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளரும் கட்சியின் மாநில பொது குழு உறுப்பினருமான க.பெருமாள்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) மேற்பார்வையில், மாநிலத் தலைமையும், மூத்த தலைவர்களும் இணைந்து, மாவட்ட வாரியாகக் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள், களநிலவரம் ஆகியவற்றை ஆய்வு செய்து, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சமீபத்தில் தமிழகத்தில் புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க, பிற மாநிலங்களிலிருந்து மேலிடப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, நிர்வாகிகளை மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன அதன் அடிப்படையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளரும் கட்சியின் மாநில பொது குழு உறுப்பினருமான க.பெருமாள்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், செயல்பாடுகளைச் சீரமைக்கவும் இந்த நியமனங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. மேலும், இது தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர், மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள் மத்தியில் வரவரவற்பை பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரடி விசாரணை
புதன் 4, மார்ச் 2026 8:14:22 PM (IST)

தூத்துக்குடி வருகை தரும் துணை முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் முடிவு?
புதன் 4, மார்ச் 2026 8:08:03 PM (IST)

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி
புதன் 4, மார்ச் 2026 5:27:54 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

தூத்துக்குடியில் 10 மாடி காவலர் குடியிருப்பு திறப்பு விழா : எஸ்பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்!
புதன் 4, மார்ச் 2026 4:04:36 PM (IST)

ரூ.2 கோடி பேவர் பிளாக் நடைபாதை இரண்டே ஆண்டுகளில் சிதிலம்: பாஜக கடும் கண்டனம்
புதன் 4, மார்ச் 2026 4:02:30 PM (IST)










தமிழ்ச்செல்வன்Jan 19, 2026 - 10:32:38 AM | Posted IP 104.2*****