» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உட்பட 2 பேர் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!

ஞாயிறு 18, ஜனவரி 2026 8:29:40 AM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் உட்பட 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜன் மகள் முத்துச்செல்வி என்ற முத்துமாரி (24). இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, பிப்.15ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் முத்துமாரி, கல்லூரியில் படித்து வந்த தன்னுடைய உறவினரான மணியாச்சி ஒட்டநத்தம் பகுதியைச் சேர்ந்த சிவா மகன் கலைச்செல்வன் (22) என்பவருடன், தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் வேலை செய்யும் தனது தந்தையை பார்க்க பைக்கில் நேற்று சென்றாராம்.

அப்போது, துறைமுகத்திலிருந்து உரம் ஏற்றி வந்த டிப்பர் லாரி, அவர்களது பைக் மீது மோதியதாம். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இத்தகவலறிந்த தெர்மல் நகர் போலீசார், அவர்களது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

சாமுவேல்Jan 20, 2026 - 02:12:58 PM | Posted IP 104.2*****

இந்த சர்வீஸ் ரோட்டில் எடை மேடையும் மணல் குடோனும் இருப்பதால் லாரிகள் wrong side ல் வருவதை காவல்துறை தடுத்தால் விபத்து இந்த பகுதியில் நடக்காது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory