» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரதமர் மீது கனிமொழி எம்பி குற்றச்சாட்டு : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!

சனி 17, ஜனவரி 2026 5:20:11 PM (IST)


தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர் பொங்கல் கொண்டாடுவதாக விமர்சித்த கனிமொழி எம்.பி.யின் கருத்துகளுக்கு, தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சித்ராங்கதன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "பொங்கல் என்பது அரசியல் நாடகமல்ல; அது தமிழர்களின் உயிரோடு கலந்த பாரம்பரிய விழா. பாரதிய ஜனதா கட்சி தேர்தல் காலத்தில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் விவசாயிகளின் உழைப்பை மதித்து, பாரம்பரிய விழாக்களை கொண்டாடி வருகிறது.

விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’, பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடியாக பயன் அளித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டங்கள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன. 

விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்காமல் நெல் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பொறுப்பேற்க வேண்டிய நிர்வாகமும், மக்களவை உறுப்பினரும் இதுவரை எந்தத் தீர்வு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

மேலும், விவசாயிகளிடமிருந்து அரசு நெல் கொள்முதல் சரிவர நடைபெறாமல், கொள்முதல் மையங்களில் காலதாமதம், எடை குறைவு, பணம் வழங்குவதில் தாமதம் போன்ற பிரச்சினைகள் தொடர்கின்றன. இதன் காரணமாக விவசாயிகள் தனியாரிடம் குறைந்த விலைக்கு விளைச்சலை விற்கத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனுடன் உரத் தட்டுப்பாடு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நிலவி, விவசாய பணிகள் முடங்கியுள்ளன. இத்தகைய அடிப்படை விவசாய பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள், பிரதமர் நாடகம் ஆடுவதாக அரசியல் நோக்கத்துடன் குற்றச்சாட்டு முன்வைப்பது வருத்தமளிக்கிறது.

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, சமூக நீதி குறித்து பேசும் கனிமொழி அவர்களே உங்கள் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வியடைந்துள்ளதையும், தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி போதிய அளவில் இல்லை என்பதையும் தம்மிடம் உள்ள நிர்வாகப் பொறுப்பை உணர்ந்து பரிசீலிக்க வேண்டும்.

"தமிழ் மொழி, தமிழ் பண்பாடு குறித்து பேசும் கனிமொழி அவர்கள் மத்திய அரசு தமிழுக்கு வழங்கி வரும் நிதி, செம்மொழித் தமிழ் வளர்ச்சி, உலக அளவில் தமிழை எடுத்துச் செல்லும் முயற்சிகள் குறித்து மௌனம் காக்கிறார், பாரதிய ஜனதா கட்சி தமிழர் நலனுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதியாக செயல்பட்டு வருகிறது

கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் லாபத்திற்காக கூறப்பட்டவை என்றும், உண்மை நிலவரத்திற்கு முற்றிலும் மாறானவை என்றும் தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தெரிவித்தார்


மக்கள் கருத்து

BalaJan 17, 2026 - 11:53:26 PM | Posted IP 172.7*****

பாவம் வடை சுட்டுதான் பழக்கம் பொங்கல் வைக்க வந்து இருக்கார். அவருக்கு பொங்கல் வச்சு படையல் போட்டுருவோம்..

ராஜாJan 17, 2026 - 05:34:35 PM | Posted IP 104.2*****

2027ல் SPL pongal

ராஜாJan 17, 2026 - 05:34:35 PM | Posted IP 104.2*****

2027ல் SPL pongal

ராஜாJan 17, 2026 - 05:34:35 PM | Posted IP 162.1*****

2026ல் SPL pongal

ராஜாJan 17, 2026 - 05:34:11 PM | Posted IP 172.7*****

2026ல் SPL pongal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory