» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக முதல்வருக்கு சூரிய பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்பிய அரசு பள்ளி மாணவிகள்
புதன் 14, ஜனவரி 2026 3:12:16 PM (IST)

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைபள்ளி மாணவிகள் தமிழக முதல்வருக்கு சூரிய பொங்கல் வாழ்த்து அட்டைகளை தபால் பெட்டியில் அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்ட முழுவதும் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. வருகிற தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சூரியனை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சூரியனைப் பற்றிய குறிப்புகள் உள்ள சூரிய பொங்கல் வாழ்த்து அட்டையை தயாரித்துள்ளது.
சூரிய பொங்கல் வாழ்த்து அட்டையினை பள்ளி மாணவிகள் முதலமைச்சர், கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குனர்,மாவட்ட ஆட்சியர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தபால் பெட்டி மூலம் அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தார்.
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ செயலாளர் முத்துமுருகன்,திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்பியல் ஆசிரியை கமலாராணி அனைவரையும் வரவேற்றார். சூரிய பொங்கல் வாழ்த்து அட்டையினை தமிழக முதலமைச்சர் உள்பட உறவினர்கள்,நண்பர்களுக்கு தபால் பெட்டி மூலம் அனுப்பி வைத்தனர்.
இதில் பள்ளி ஆசிரியர்கள் சுஜா,அகிலாராணி தபால் துறை அலுவலர் பெருமாள் சாமி உள்பட ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இயற்பியல் ஆசிரியை கிரேனா நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு : உத்திரப்பிரதேச வாலிபர் கைது
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:36:56 PM (IST)

கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:42:58 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:18:25 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ரூ. 784 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:12:09 PM (IST)

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)










