» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!

செவ்வாய் 13, ஜனவரி 2026 5:02:18 PM (IST)

திருச்செந்தூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து 6 மாதங்களாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் (38) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் 2ல் நடைபெற்று வந்த நிலையில் எதிரி செல்வன் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கடந்த 30.06.2025 அன்று நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்தையடுத்து போலீசார் தொடர்ந்து செல்வனை தேடிவந்தனர்.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நை. சிலம்பரசன்  உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர்  தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 6 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த செல்வனை நேற்று கைது செய்து சிறையிலடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory