» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெடுஞ்சாலைகளில் வேகதடைகளை அகற்ற வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை!!

திங்கள் 29, ஏப்ரல் 2024 10:01:30 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் தேவையில்லாத வேகத் தடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைத் துறையினர் வேகக்தடைகள் அமைப்பதில் காட்டும் ஆர்வத்தை ஆக்கிரமிப்பு அகற்றுவதில் காட்டுவதில்லை.தூத்துக்குடி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வேகத் தடைகள் எந்த அனுமதியுமின்றி அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினரிடம் புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லும் குடும்பத்தினர் அதிகமாக சிறு சிறு விபத்துகளில் சிக்கி காவல்துறை இடம் புகார் அளிக்காமல் செல்கிறார்கள். 

உயிர் சேதம் ஏற்பட்டால் மட்டுமே வெளியே தெரிய வருகிறது. அதுவும் வேகத்தடை தான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று முதல் தகவல் அறிக்கை கூட பதியப்படுவதில்லை. பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடை அமைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுக்குள் எல்லாம் வேகத் தடைகள் அமைத்துள்ளனர். யார் யாரெல்லாம் ரியல் எஸ்டேட் பண்ணி பிளாட்டுகள் போடுகிறார்களோ அவர்கள் பிளாட் டுகளின் முன்னால் எல்லாம் மிகப் பெரிய ஆபத்தானவேகத்தடைகள் போடப்பட்டுள்ளது. 

உதாரணமாக புதுக்கோட்டையில் இருந்து ஏரலுக்கு செல்லக்கூடிய 12 கிலோமீட்டர் சாலையில் 35 வேகதடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்ற சொன்னால் எந்த நட வடிக்கையும் எடுப்பது கிடையாது தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு வேகத்தடைத் துறை என புதிதாக பொதுமக்கள் பெயர் வைத் துள்ளனர். 

சாலைகள் அமைக்கப்படுவது, அவசரத்துக்குவேகமாகசெல் வதற்குதான். இந்த வேகத்தடைகளினால் ஆம்புலன்ஸ் மற்றும் ஃபயர் சர்வீஸ் வண்டிகள் செல்வதில் அதிக சிரமம் ஏற்படுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தேவையில்லாத வேக தடைகளை எல்லாம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

சாந்தகுமார் ஏரல்Apr 29, 2024 - 03:16:17 PM | Posted IP 172.7*****

புதுக்கோட்டையில் இரண்டாவது ஸ்டாப் அருகில்,மற்றும் சில்பாட்டு காட்டுக்கில்,ஒயின்சாப்அருகில் தேவைதானா நன்பரே மேலும் பேருந்து நித்தங்களில் எல்லாம் வேகத்தடை அமைப்பது எந்த விதத்தில் நியாயம் அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயனைப்பு மற்றும் மீட்பு வாகனங் விரைந்து செயல்படமுடியும் இதில் சுநத்தைவிட பொது நலனுக்கே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

நிர்மல்Apr 29, 2024 - 01:39:36 PM | Posted IP 162.1*****

புதுக்கோட்டையில் இருந்து கூட்டாம்புளி வரை சரியான இடத்தில் தான் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது அதில் வெள்ளை கலர் வர்ணமும் பூசப்பட்டுள்ளது டம் பிரேட் ஒள ஒளிரக்கூடிய ஸ்டிக்கரும் பொருத்தப்பட்டுள்ளது பொருத்தப்பட்டுள்ளது இருப்பினும் அவர்கள் வேகமாக சென்று கீழே விழுந்தால் அதற்கு வேகத்தடை பொறுப்பல்ல ஆகையால் புதுக்கோட்டையில் இருந்து கூட்டாம்புளி செல்லும் பாதையில் வேகத்தடை பொதுமக்கள் ஆகிய நாங்கள் அகற்ற விட மாட்டோம் நிர்மல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory