» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகம் திறப்பு விழா

புதன் 15, மே 2024 3:36:39 PM (IST)தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகம் திறப்பு விழா இன்று திருச்செந்தூர் மெயின் ரோடு சிவந்தாகுளம் அருகே கட்சியின் மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் தலைமையில் நடைபெற்றது. இளைஞர் சிறுத்தை எழுச்சி பாசறை மாநிலத் துணைச் செயலாளர் விமல் வங்காளியார் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் கலைவேந்தன் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

முன்னதாக விழாவிற்கு வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். திறப்பு விழாவில் மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மாரிமுத்து, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் விஜி, மாவட்ட செய்தி தொடர்பாளர் செல்வகுமார், 49ஆவது வார்டு செயலாளர் அந்தோணிசாமி உள்ளிட்ட கட்சியின் மத்திய மாவட்ட, ஒன்றிய, நகர, முகாம், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory