» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களின் நிலை: ஆட்சியர் ஆலோசனை!

புதன் 15, மே 2024 4:42:53 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு செல்லாத மாணவர்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆலோசனை நடத்தினார். 

2023-2024ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களின் தற்போதைய நிலை, பள்ளிக்கு வருகை புரியாத மற்றும் பொது தேர்வு எழுதாத மாணவர்களின் தற்போதையை நிலை குறித்து ஆய்வு மற்றும் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (15.05.2024), 2023-2024ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களின் தற்போதைய நிலை குறித்தும், பள்ளிக்கு வருகை புரியாத மற்றும் பொது தேர்வு எழுதாத மாணவர்களின் தற்போதையை நிலை குறித்து பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு மற்றும் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக தேர்ச்சி பெற்றுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  பாராட்டினார். மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்றுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஆய்வு செய்தார். 2022-2023-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி செல்லாத மாணவர்களின் தற்போது நிலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்தார். 

2022-2023-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அறிக்கையை ஆய்வு செய்தார். 2022-2023-ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கு வருகை புரியாத மற்றும் பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களின் தற்போது நிலை குறித்த அறிக்கையையும் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, உதவி இயக்குநர் திறன் மேம்பாடு ஏஞ்சல் விஜயா,  மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory