» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிய வகை விலாங்கு மீன் கண்டுபிடிப்பு: ஆய்வில் தகவல்

புதன் 15, மே 2024 4:34:38 PM (IST)



தூத்துக்குடி கடலில் 60 மீட்டர் ஆழத்தில் புதிய வகை விலாங்கு மீன்கள் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி மீன்பிடிக்கச் சென்ற போது அரியவகை மீன் இனம் கண்டு பிடிக்கப்பட்டது. பிடிபட்ட மீன் மாதிரிகளை ஆராய்ச்சியாளர் கோடீஸ்வரன் என்பவர் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினார்.

அதன் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் பிடிப்பட்டது புதிய வகை விலாங்கு மீன் என்பது தெரியவந்துள்ளது. இது கான்கிரிட் ஈல் இனத்தைச் சேர்ந்த அரியோசோமா வகையை சேர்ந்தது ஆகும். இந்த வகை காங்கிரிட் ஈல்ஸில் 32 இனங்கள் உள்ளன.

மேலும் 243 வெவ்வேறு ஈல் இனங்கள் உலகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று தான் தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்டவை. தூத்துக்குடி கடற்கரையில் 60 மீட்டர் ஆழத்தில் இந்த விலாங்கு மீன்கள் காணப்படுகின்றன. இந்த இனங்கள் இந்தியப் பெருங்கடலில் காணப்படும் வகையாகும். தேசிய மீன் ஆராய்சியாளர் இது தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் இது ஒரு அறியப்படாத ஈல் இனங்களின் உருவவியல் என தெரியவந்துள்ளது.

இது அதன் மற்ற மீன் இனங்ளில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது. இது வெளிர் நிறத்துடன் உடல் பழுப்பு முதுகு வெள்ளி நிறத்தில் உள்ளது. எனவே இவை இந்திய நீர்நிலைகளின் அனைத்து ஒருங்கிணைப்புகளில் இருந்தும் வேறுபடுகின்றன. இவை குறைந்த பட்சம் 42 சென்டிமீட்டர் நீளம் கொண்டவையாக உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory