» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடம்பூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.71,850 பறிமுதல்

திங்கள் 25, மார்ச் 2024 7:41:56 AM (IST)

கடம்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.71 ஆயிரத்து 850ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி பேரவை தொகுதி  கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், நிலையான கண்காணிப்பு குழு அலுவலருமான அனந்த லட்சுமி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பிச்சை, தலைமை காவலர் ராஜாராம், காவலர் சமுத்திரக்கனி ஆகியோர் கடம்பூர்-கயத்தாறு சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டார்களாம். 

அப்போது அவ்வழியே சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் ஆவணங்கள் ஏதுமின்றி ரூ. 71 ஆயிரத்து 850 இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவர்கள் பீடி விற்பனை செய்த பின் பணத்தை வசூல் செய்து வருவதாக கூறினர். இருப்பினும் அவர்களிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லாததை யடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பணத்தை கோவில்பட்டி வட்டாட்சியர் சரவண பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory