» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கடற்பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து

சனி 27, ஏப்ரல் 2024 12:47:16 PM (IST)



தூத்துக்குடி கடற்பகுதியில் கேரள விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுகிறார்களா என்று கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இந்நிலையில், கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகுகள் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் பெரியதாழை வரையில் கடலோர காவல் படையினர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

இதில், தூத்துக்குடி மீன்வளத்துறை ஆய்வாளர் பொன் சரவண கண்ணன் தலைமையில் மீன்வளத்துறை அலுவலர்கள் சேவியர், தேசிங்கு, கடலோர சட்ட அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் உமையொருபாகம், மற்றும் காவலர்கள் செல்லையா, பாண்டியன், தோமஸ் சேவியர் ஆகியோர் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளுடன் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த Aadhesh என்ற கப்பலில் கூட்டாக ரோந்து மேற்கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory