» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் உப்பு விலை திடீர் உயர்வு

சனி 27, ஏப்ரல் 2024 3:14:03 PM (IST)

தூத்துக்குடியில்  உப்பு உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், உப்பு விலை திடீரென உயர்ந்து உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் உப்பு உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதே வேளையில் தூத்துக்குடியில் உப்பு விலை திடீரென உயர்ந்து உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டன் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையான பழைய உப்பின் விலை தற்போது தரத்துக்கு ஏற்ப ஒரு டன் ரூ.4 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெருமழையால் தாமிரபரணியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏரல், ஆறுமுகநேரி மற்றும் உப்பளங்களில் வெள்ளம் புகுந்தது. அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது. மேலும், தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு அளவு வெகுவாக குறைந்துவிட்டது. 

வரத்து குறைந்ததால் உப்பு விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.  புதிதாக உற்பத்தியாகி வரும் உப்பு ஒரு டன் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகிறது. உப்பு விலை உயர்ந்து காணப்படுவதால், தூத்துக்குடியில் இருந்து உப்பு இறக்குமதி செய்த கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள், தற்போது குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய தொடங்கி உள்ளனர். இதனால், தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


மக்கள் கருத்து

எல்லாம்Apr 27, 2024 - 04:56:45 PM | Posted IP 162.1*****

துட்டு துட்டு துட்டு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory