» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 3பேர் கைது : பைக் பறிமுதல்!!

சனி 27, ஏப்ரல் 2024 4:06:34 PM (IST)



தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து, இருசக்கர வாகனத்தை  பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர்  அலெக்ஸ்ராஜ் தலைமையில் சார்பு ஆய்வாளர்  வாசுதேவன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் ஜங்ஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில்,  தூத்துக்குடி ஆவுடையார்புரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மதன்குமார் (20), தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த முனியசாமி என்பவரது மகன்களான சந்துரு (20) மற்றும் அரவிந்த் (19) ஆகியோர் என்பதும்,  விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

மக்களேApr 28, 2024 - 12:43:16 PM | Posted IP 162.1*****

கோயில்பிள்ளை நகர் பண்டுகரையில் பிளாக்கில் சரக்கு கிடைக்கிறதை பலமுறை புகாரளித்தும் பேப்பர் குப்பைக்கும் மேஜைக்கு வெயிட்டான கவனிப்பும் கிடைக்கிறது.

DurgadeviApr 28, 2024 - 12:38:54 PM | Posted IP 162.1*****

காவல்துறை துணையுடன் கோயில்பிள்ளை நகர் பண்டிகையில் குடும்பம் குடும்பமாக பிளாக்கில் 24×7 மது விற்பனை ஜோராக நடைபெறுகிறது இதை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவனிப்பாரா அல்லது கலெக்டர் கவணிப்பாரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory