» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்: கார்த்தி சிதம்பரம் விருப்பம்
சனி 20, ஜூலை 2024 3:53:37 PM (IST)
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும். கூட்டணியால் ஜெயித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது என்று கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.
சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:- 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெற வேண்டும். கூட்டணியால் ஜெயித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. கூட்டணி என்பதால் நாம் எதையும் தட்டிக் கேட்காமல் நிற்கக் கூடாது. காவல்துறை ரவுடிகளை என்கவுன்டர் செய்து வழக்கை சரியாக நடத்துகிறார்கள் என்று நினைக்கவேண்டாம். வழக்கை முடிப்பதற்காக தான் என்கவுன்டர் செய்கிறார்கள்.
இதையெல்லாம் பேசும்போது மின் கட்டணத்தை பற்றியும் நாம் பேசியாக வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுக்கு இருக்கிற உரிமை நமக்கு இல்லையா? கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கிற உரிமை நமக்கு இல்லையா? நாமும் நம்முடைய கருத்தை ஆழமாக பதிவு செய்ய வேண்டும்.
அப்போது தான் மக்கள் நம்மை திரும்பி பார்ப்பார்கள். நாம் கூட்டணியை மதிக்கிறோம். திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். திமுகவின் திட்டங்களை மதிக்கிறோம். மகளிர் உரிமை தொகை திட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் நாம் பொதுப்பிரச்சினைகளில் பேச தயக்கம் காட்டுகிறோம். இனி தயக்கம் காட்ட கூடாது" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வியாழன் 22, ஜனவரி 2026 3:32:40 PM (IST)

தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: இபிஎஸ் குற்றச்சாட்டு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 10:22:25 AM (IST)

கனிம கொள்ளையை தடுக்க முடியாததால் திமுக நிர்வாகி விலகல்: அன்புமணி விமர்சனம்!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:35:21 PM (IST)

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:12:50 AM (IST)

அடுத்த முறையும் திராவிட மாடல் ஆட்சி தொடரும் : கனிமொழி எம்.பி நம்பிக்கை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:20:19 PM (IST)

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 8:29:15 PM (IST)










KAMARAJAR FANSJul 20, 2024 - 04:45:47 PM | Posted IP 162.1*****