» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
விஜய்க்கு என்று தனிப்பட்ட தத்துவமோ, கோட்பாடோ கிடையாது: சீமான் விமர்சனம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:20:15 AM (IST)
இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் அளிக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகள் நாட்டைப் பெரும் கடன் சுமைக்கும், அடமானத்திற்கும் தள்ளிவிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ள தாலிக்குத் தங்கம் மற்றும் 2,500 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்துத் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.ஏற்கனவே கடன் சுமை அதிகமாக உள்ள நிலையில், இத்தகைய அறிவிப்புகளை நிறைவேற்றத் தேவையான நிதி ஆதாரம் எங்கிருந்து வரும் என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், விஜய்க்கு என்று தனிப்பட்ட தத்துவமோ அல்லது கோட்பாடோ கிடையாது என்றும், ஊழல் கட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களே அவருடன் இருப்பதாகவும் விமர்சித்தார்.
சாராயத்தை ஒழிப்பேன் என்று சொல்ல மறுக்கும் விஜய், முந்தைய ஆட்சியாளர்கள் செய்ததையே மீண்டும் செய்வதாகக் கூறினார். வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவோம் என்று சொல்லாமல், வெறும் பணத்தை வழங்குவது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் சீமான் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
ALLELUYAMar 12, 2026 - 03:27:06 PM | Posted IP 162.1*****
சமீபகாலமாக இவர் கொஞ்சம் அறிவு பூர்வமாக பேச ஆரம்பித்து விட்டார். வாழ்த்துக்கள் செபாஸ்டியன் சைமன்
முட்டாள்Mar 11, 2026 - 01:07:36 PM | Posted IP 172.7*****
புதிதாக ஆட்சிக்கு வந்தால் அப்படிதான் , ஓ வேலைய போய் பாரு
இந்தMar 10, 2026 - 06:57:18 PM | Posted IP 104.2*****
குடிகார பய பேச்சை பாருங்க
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானத்தையும் தாங்க நான் தயார்: முதலமைச்சர் விஜய்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 10:42:14 AM (IST)

மின் ரீடிங் குளறுபடிகள் தீரும் வரை கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
வெள்ளி 31, ஜூலை 2026 11:54:26 AM (IST)

அரசு மருத்துவமனைகளில் குறைகளைக் களைய 50 அதிகாரிகள் நியமனம்: சுகாதாரத்துறை அதிரடி!
சனி 11, ஜூலை 2026 12:06:38 PM (IST)

தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால் வரவேற்போம்: அண்ணாமலை விளக்கம்!
திங்கள் 6, ஜூலை 2026 5:17:54 PM (IST)

திமுக முக்கியப் பிரமுகர் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் - சீமான் திடீர் சந்திப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 4:49:59 PM (IST)

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார்: வைகோ நம்பிக்கை - திமுக மீது கடும் விமர்சனம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:47:32 PM (IST)









ஆமாMar 16, 2026 - 09:51:32 AM | Posted IP 104.2*****