» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்: புதிய கட்சியை அறிவித்தார் சசிகலா
வெள்ளி 13, மார்ச் 2026 4:47:08 PM (IST)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்கள் மற்றும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியின் பெயரை வெளியிட்டார். சசிகலா தனது கட்சிக்கு "அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்" (அஇபுதமமுக) எனப் பெயரிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருந்த நிலையில், இன்று பெயரை அறிவித்துள்ளார். இக்கட்சியின் பெயரில் ஜெயலலிதாவின் பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எம்.ஜி.ஆரைக் குறிக்கும் 'புரட்சித்தலைவர்' என்ற பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், "இந்தக் கட்சியை ஒரு தொண்டர்தான் தொடங்கினார், அதில் நான் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்" என்று கூறி சசிகலா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கட்சியின் சின்னமாக 'தென்னந்தோப்பு' அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சசிகலா பேசுகையில்: "நான் தனி மரமாக வரவில்லை, தோப்பாக (மக்களுடன்) வந்துள்ளேன் என்பதைக் குறிக்கவே இந்தச் சின்னம். நான் என்றென்றும் மக்களுடன்தான் இருப்பேன்." வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இக்கட்சி போட்டியிடும். ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும். ஏற்கனவே தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி சாதித்தாரா இல்லையா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பின் தெரியும் என்று அவர் நேரடி விமர்சனத்தை முன்வைத்தார். ஏற்கனவே ராமநாதபுரம் கமுதியில் நடைபெற்ற "களம் காண்போம் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்" மாநாட்டில் கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்கள் கொண்ட அந்த கொடியின் நடுவே அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூவரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்; மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
புதன் 24, ஜூன் 2026 11:44:30 AM (IST)

தவெக அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை வெளிப்படுத்தியுள்ளது: வைகோ புகழாரம்!
வியாழன் 18, ஜூன் 2026 3:32:37 PM (IST)

ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை அமைப்புகளுக்குப் பயன்படுத்தத் தடை: தலைமை ரசிகர் மன்றம் அறிக்கை
ஞாயிறு 14, ஜூன் 2026 8:47:41 AM (IST)

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது! – அமைச்சர் என். ஆனந்த் அதிரடி உத்தரவு!
வெள்ளி 22, மே 2026 11:37:11 AM (IST)

மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்புக்குக் கால அவகாசம் தேவை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
வியாழன் 14, மே 2026 4:36:44 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)









JAY JAY JAYMar 14, 2026 - 12:40:08 PM | Posted IP 172.7*****