» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாலுமாவடி காமராஜ் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா!

சனி 16, ஜூலை 2022 3:14:32 PM (IST)நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்த நாள் விழா பள்ளித் தலைவர் அழகேசன் தலைமையில் நடைபெற்றது. 

பள்ளிக் கல்விக் கமிட்டி உறுப்பினர்  இராம சாமி  முன்னிலை வகித் தார்.விழாவில் பள்ளிச்செய லர்  நவநீதன்  வரவேற்று பேசினார்.10,12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்  தேவதாசன்  பரிசு வழங்கி மாணவர்களை பாராட்டினார். இராமலெட்சுமி அம்மாள் நினைவாக காமராஜ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் ஆவண எழுத்தர் முத்தணைந்த பெருமாள்  11ஆம்வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழ் வழி மற்றும் ஆங்கிலவழியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கி 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பாராட்டி ஆசிரியர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கினார். 

நெய்விளை அகஸ்டின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் இடங்களை பெற்ற மாணவர்கள் மற்றும் எட்டாம் வகுப்பு தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி ஊக்கப்பரி சாக ரூ.9000 வழங்கினார். விழாவில் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் மற்றும் சன்டிவி, கலைஞர் டிவி புகழ் . மு. இராஜதுரை (முதல்வர், இராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தூத்துக்குடி)  தலைமையில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. 

விழாவில் நாலுமாவடி ஊர் பிரமுகர்கள்  லோகநாதன், தாமோதரன், தனசேகரன், சுதாகர், அறிவழகன், பொன்துரை, சுதாகரன்,  பாலகண்ணன்,  விக்னேஷ், அஜய் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப் பித்தனர். விழாவிற்கான  ஏற்பாடுகளை பள்ளிச்செயலர் நவநீதன்  வழிகாட்டுதலின் படி தலைமை ஆசிரியர்  திருநீலகண்டன், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். விழா முடிவில் உதவிதலைமை ஆசிரியை இரா. மாலதி  நன்றி கூறினார். முதுகலை ஆசிரியை சிவசாந்தி, முதுகலை ஆசிரியர் கேசவஆனந்தபிரகாஷ், மற்றும் பட்டதாரி ஆசிரியை  கலைச்செல்வி  ஆகியோர் விழாவினை தொகுத்து வழங்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory