» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா!

திங்கள் 8, ஏப்ரல் 2024 4:14:24 PM (IST)தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரி ஆண்டு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் மூன்றாம் "ஆண்டு விழா" நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் சோமு தலைமை வகித்தார். தூத்துக்குடி காரப்பேட்டை நாடார்கள் மகமை தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நாடார் மகமை செயலாளரும், கிரேட் காட்டன் ரோடு வியாபாரிகள் சங்கத் தலைவருமான சந்திர சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

காமராஜ் மகளிர் கல்லூரியின் தாளாளர் இரா.முத்துசெல்வம் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி நினைவுபரிசு மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவப்படுத்தினார். கல்லூரி முதல்வர் வான்மதி கல்லூரியின் ஆண்டறிக்கை வாசித்தார். துறைவாரியாக பல்வேறு பாடங்களில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும், விளையாட்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 

இவ்விழாவில் மாணவிகளின் பரத நாட்டியம், நாடகம், குழு நடனம், ஆடை அலங்கார அணிவகுப்பு போன்ற கலைநிகழ்ச்சிகள் மாணவிகளால் நிகழ்த்தப்பட்டது. முன்னதாக மாணவி அனுஸ்ரீ தேவி வரவேற்புரை வழங்கினார். நிறைவாக மாணவி ஐஸ்வர்யா நன்றியுரை வழங்கினார். மாணவி ஜெயந்தி, யூனிகா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory